தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு புயலுக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதேவேளையில் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
Also Read : கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் முதலிடம் பிடித்த வினேஷ் போகத்..!!
மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பகலில் மிதமான மழை பெய்யத் தொடங்கி மாலை, இரவில் தீவிரமடைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.