இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவை மீட்பது தொடர்பாக இந்தியாவில் வெளிவரும் (Kachchathivu) தகவல்களில் எந்தவித ஆதாரங்களும் இல்லை என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
இதில் அனைத்து கட்சிகளும் ஒருவர் மேல் இருக்கும் குறை நிறைகளை மக்களிடம் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில நாட்களாக இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவை குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் காற்றில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
தேர்தல் நேரம் என்பதால் எப்போதோ நடைபெற்ற கச்சத்தீவு விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
Also Read : https://itamiltv.com/udayanidhi-stalin-will-be-arrested-soon-edappadi-palaniswami/
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துளாள் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிருப்பதாவது :
இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவை மீட்பது தொடர்பாக இந்தியாவில் வெளிவரும் தகவல்களில் எந்தவித ஆதாரங்களும் இல்லை. 1974ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இருநாட்டு மீனவர்களும் கச்சத்தீவில் மீன்பிடிக்க முடியும். ஆனால், 1976-ல் இந்த ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டது.
திருத்தம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இருநாட்டு மீனவர்களுக்கும் கச்சத்தீவு பகுதிக்குள் (Kachchathivu) மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.