அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நச் பதிலை பேட்டியில் கொடுத்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது .தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read : கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை – நாடு முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்..!!
முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட தெளிவான விளக்கமே, வெள்ளை அறிக்கைதான். வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் ஏமாற்றும் திட்டங்கள் அல்ல. அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கைகள் எப்படி இருந்தன என்பது எனக்குத் தெரியாதா.
இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நச் பதிலை பேட்டியில் கொடுத்துள்ளார்.