ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் ( pmmodi ) பெண்களின் தாலியை காங்கிரஸ் அபகரிக்கப்பார்க்கிறது என பிரதமர் மோடி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்து சர்சைக்குரியவகையில் பேசியிருந்தார் பிரதமரின் அந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையிலும் பிரதமரின் பேச்சு மிக மோசமாக உள்ளது என கூறி பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியதாவது :
நான் இந்த தேசத்து மக்களை எச்சரிக்க விரும்புகிறேன். காங்கிரஸும், அவர்களின் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் உங்களின் சேமிப்பையும், சொத்தையும் குறி வைத்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யாரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது; எவ்வளவு சொத்து இருக்கிறது; தாய்மார்களிடமும், தங்கைகளிடமும் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்றெல்லாம் விசாரணை செய்யப்போவதாக சொல்கிறார் காங்கிரஸின் மூத்த தலைவர்.
அந்தத் தங்கம் லட்சுமி கடாட்சம். அது புனிதமானது. சட்டமும் அதைப் பாதுகாக்கிறது. இப்போது இந்த கும்பல்(காங்கிரஸ்) பெண்களின் மங்கள்சூத்ராவை குறி வைத்திருக்கிறது.
தாய்மார்களின், சகோதரிகளின் தங்கத்தை திருடுவதுதான் இந்த கும்பலின் குறிக்கோள். உங்கள் கிராமத்தில் உங்களுக்கு ஒரு பூர்வீக வீடு இருக்கலாம். நகரத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தில் கருத்தில்கொண்டு சிறியதொரு பிளாட்டை நீங்கள் வாங்கியிருக்கலாம். இந்த இரண்டில் ஒன்றை இந்த கும்பல் எடுத்துக்கொள்ளும்.
இது கம்யூனிஸ சிந்தனை. இந்த சிந்தனையின் அடிப்படையில் பல தேசங்களை ஏற்கெனவே சீரழித்துவிட்டார்கள். இப்போது இந்த மோசமான திட்டத்தை, காங்கிரஸும், INDIA கூட்டணி கட்சியினரும் இந்தியாவில் நடைமுறைப்படுத்த பார்க்கிறார்கள்’
நேற்று இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் பெண்களின் தாலியை காங்கிரஸ் அபகரிக்கப்பார்க்கிறது என சர்ச்சையாகப் பேசியிருக்கிறார் மோடி.
தாலி குறித்தோ, மோடி சொல்வது மாதிரியான சொத்துப் பகிர்வு குறித்தோ ( pmmodi ) காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது