திருப்பூரில் நைட் நேரத்தில், தன்னிடம் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு போனை போட்டு, தன் மகனிடம் பேச சொல்லி மிரட்டியுள்ளாராம் ஒரு டீச்சர்..
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து, காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு கணக்கு டீச்சராக வேலை பார்த்து வருபவர் சாந்திப்பிரியா.
கணிதப்பாட முதுகலை பயின்றவர்.. பட்டம் வாங்கி என்ன பிரயோஜனம். ஒரு ஆசிரியை இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடிந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது.
இவர் டீச்சராக வேலையில் சேர்ந்தபோதிருந்தே ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன.. மாணவிகளிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொள்வது.. கெமிஸ்ட்ரி லேப்-பில் அமிலக் குடுவைகளின் பக்கத்தில், மாணவியை தனியாக உட்கார வைத்தது.. கிளாஸில் பாடம் நடத்தாமல், தன் வீட்டு விஷயங்களை பேசிக் கொண்டிருப்பது.. இதைவிட முக்கியம், தன் வகுப்பு மாணவி ஒருவரை, “மருமகளே” என்றுதான் கூப்பிடுவாராம்.. இந்த மாணவியை தன்னுடைய மகனிடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.
நைட் நேரம் ஆகிவிட்டால், மாணவிகளுக்கு இந்த டீச்சர் போன் போட்டு, பாட விஷயமாக பேச வேண்டும் என்று சொல்லி பேச்சை ஆரம்பிப்பாராம்.. ஆனால், பாடம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல், தன்னுடைய மகனை பற்றி அந்த பெண்களிடம் பேசி வந்துள்ளார்.. தன் மகனிடமும் அந்த பெண்கள் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.. இதனால், டீச்சர் போனை, மாணவிகள் இரவு நேரத்தில் எடுத்து பேசுவதை தவிர்த்துள்ளனர்.. ஆனால், மறுநாளே கிளாஸில் வந்து அந்த பெண்களை மிரட்டுவாராம்..
அதுமட்டுமல்ல, கிளாஸ்ரூமில், “பழிக்குப் பழி” என்று கரும்பலகையில் எழுதி மாணவர்களின் மனதில் பழி உணர்வை விதைக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார்..
பாடம் நடத்தாமலேயே சும்மாவே கிளாஸில் உட்கார்ந்திருப்பாராம்.. “பாடம் நடத்துங்கள்” என்று மாணவிகள் கேட்டால், தன்னுடைய காலில் விழுந்து ப்ளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று சொல்வாராம்.. இதைவிட இன்னொரு கொடுமை உள்ளது.. இந்த மாணவிகள் தினமும் நைட்டில் தூங்கும்போதும், இந்த டீச்சரின் கணவரையே மனதில் நினைத்துக்கொண்டு தான் தூங்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார்..
அந்த டீச்சர் மீது, இவ்வளவு புகார்களையும், ஒட்டுமொத்த மாணவிகளும் தந்த நிலையில், விஷயம் அதிகாரிகள் வரை போய்விட்டது. வட்டார கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி, நேரடியாகவே விசாரணை மேற்கொண்டதில் நடந்தது எல்லாமே உண்மை என்று தெரிய வந்ததையடுத்து, சாந்திப்பிரியா டீச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, பூலாங்கிணறு அரசுப்பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்யுள்ளனர்.
“பணி மாற்றம்” செய்தால் மட்டும் “புத்தி மாற்றம்” உடனே வந்துவிடப்போகிறதா என்ன?? டீச்சர் வேலைக்கே இதுபோன்ற நபர்கள் தகுதியற்றவர்கள் எனவும், அவரது பணியையே அதிரடியாக பறிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோரும் ஆத்திரமடைந்துள்ளனர்.