திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் புதிய தகவலை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் கோயிலில் தெய்வானை என்ற யானை கோவில் நிர்வாகம் சார்பில் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை பாகன் உதயன் மற்றும் அவரது உறவினர் சிசு பாலன் ஆகியோர் தெய்வானை யானைக்கு அருகில் நின்றபோது திடீரென தெய்வானை யானை இருவரையும் ஆக்ரோசத்துடன் தாக்கியுள்ளது .
Also Read : பொங்கல் ரேஸில் இணைந்த அருண் விஜய்யின் ‘வணங்கான்’ – ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!
இந்த தாக்குதலில் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் புதிய தகவலை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானையுடன் பாகனின் உறவினர் சிசுபாலன் நீண்ட நேரம் செல்பி எடுத்துவிட்டு யானையை தொட்டுள்ளார்.
புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது.
அவரை காப்பாற்ற வந்த யானைப் பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியுள்ளது.பின் அவர் தனது பாகன் என்பதை உணர்ந்து அவரை எழுப்ப முயன்றுள்ளது. அவர் எழுந்திரிக்காததால் மீண்டும் ஆத்திரத்தில் சிசு பாலனை கடுமையாக தாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.