தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது .
இந்த அமைதி பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் தோழமைகட்சி தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது :
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளான இன்று (ஆக.07) அவர் தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் ஆற்றிய மகத்தான பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.
சென்னையில் வள்ளுவர் கோட்டமும் குமரியில் வானுயர திருவுருவச் சிலையும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற வள்ளுவத்தின் மீது கலைஞருக்குள்ள தீவிர ஈடுபாட்டை உணர்த்தும்.
வள்ளுவர் விரும்பிய சமத்துவமே கலைஞரின் வேட்கை. அதன் சான்றே ‘பெரியார் நினைவு சமத்துவபுரம்’ .
வள்ளுவரின் பெயருள்ள வரையில் கலைஞரின் புகழ் நிலைக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் .