அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவது இதுவே கடைசி முறை என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கவில் இன்னும் சில நாட்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் களமிறங்கி உள்ளனர்.
இந்த இருவருக்கும் மத்தியில் கடுமையான போட்டி நிலவும் நிலையில் இருவருக்கும் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொன்டே செல்கிறது . இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவது இதுவே கடைசி முறை என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Also Read : அரசு பேருந்துகளில் இனி பார்சல் அனுப்பலாம் – வெளியானது டக்கர் அறிவிப்பு..!!
ஒருவேளை தற்போது நடக்கும் தேர்தலில் தோல்வி அடைந்தால் மீண்டும் நான் போட்டியிட மாட்டேன் ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்தமுறை நிச்சயம் நான் வெல்வேன்.
3வது முறையாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளார்.
அமெரிக்கா சட்ட விதிகளின் படி ஒருவர் அதிகபட்சமாக இருமுறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது .