மத்திய அரசைக் கண்டித்து சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் அல்வா கொடுத்து (Alwa) நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் டிசம்பர் 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக அதிதீவிர கனமழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பலர் பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
இதையும் படிங்க : Minister senthil balaji வீட்டில் மீண்டும் ED ரெய்டு!
இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது.
இதற்கிடையே சென்னை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மத்திய குழு வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்தது.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர், பிரதமர் மோடியை சந்தித்து, புயல் மற்றும் வெள்ள பாதிப்பு சேதங்களைச் சரி செய்ய மத்திய அரசிடம் 37,000 கோடி ரூபாயைக் கோரி இருந்தார்.
அதுமட்டும் இன்றி அனைத்து கட்சி எம்.பி.க்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினர்.
ஆனால் மத்திய அரசு தமிழ் நாட்டை வஞ்சிப்பதாகவும், உரியநிதி வழங்கவில்லை என்றும் திமுக அரசு தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் செயல்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், திமுக சார்பாக நெல்லை, மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அல்வா கொடுக்கும் நூதன போராட்டம் இன்று நடைபெற்றது.
https://x.com/ITamilTVNews/status/1755510494000218559?s=20
நெல்லையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போல் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில், அங்கு வரும் பயணிகள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கும் திமுகவினர் அல்வா வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அல்வாவோடு (Alwa) இணைக்கப்பட்ட நோட்டீசில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ZERO என அச்சடித்து வழங்கினர்.