லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான Pager கருவிகள் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எப்போதும் பதற்றத்துடன் காணப்படும் லெபனான் நாட்டில் அவ்வப்போது வன்முறைகள் வெடிக்கும் என்பதால் அந்நாட்டில் வாழும் மக்கள் சற்று பீதியுடனே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் லெபனான் நாடு முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான Pager கருவிகள் வெடித்து சிதறி உள்ளது.
யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த Pager வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 2750 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் தொடர்பு சாதனமான Pager-ன் ரேடியோ சிக்னல்களை மறித்து, இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஹெஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.