தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு இன்று வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பருவமழை தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இரவு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.