எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு (thunivu film). போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இப்படம் தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள விஆர். வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கிலும் துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 7.15 மணி காட்சி வழக்கம் போல் திரையிடப்பட்டது. படம் தொடங்கிய 15 நிமிடங்களில் போது புரொஜக்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு படம் நிறுத்தப்பட்டது (stopped).
கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் காட்சி திரையிடப்பட்டது. ஆனால், மீண்டும் புரொஜக்டரில் கோளாறு ஏற்பட்டதால் படம் (thunivu film) பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்கு நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதால் போலீசார் வந்து திரையரங்கு நிர்வாகிகளுடன் இணைந்து ரசிகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பலமணிநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிக்கெட் பணம் திருப்பித் தரப்படும் என்று திரையரங்கு நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், ஆன்லைன் புக்கிங் செய்தவர்களுக்கு இதுபோல் முன்பே நடந்துள்ளது எனவும் அப்போது பணம் திரும்ப வரவில்லை என ரசிகர்கள் மீண்டும் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, மீண்டும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பணம் நிச்சயமாக திரும்ப கொடுக்கப்படும் என தியேட்டர் தரப்பில் உறுதி அளித்த பின்னரே கலைந்து சென்றனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் (stopped) துணிவு படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.