தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி 425 கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
போன் , கம்ப்யூட்டர் , கிரெடிட் கார்டு டெபிட் கார்டு , UPI உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனைகளும் பண மரிமாற்றம் செய்யும் ஆப்களும் கண்டுபிடிக்கப்பட்டபட்டது மக்களின் வளர்ச்சிக்காகவும் வசதிக்காகவும் தான். ஆனால் கொஞ்சம் அசால்டாக இருந்தால் அதுவே நமக்கு மிகப்பெரிய எமனாக மாறிவிடுகிறது.
முந்தைய காலத்தில் நம்மிடம் இருக்கும் பணத்தை வழிப்பறி செய்தோ பிக் பாக்கெட் அடித்தோ திருடுவார்கள் ஆனால் இன்றோ இருந்த இடத்தில் இருந்தே நமது பணத்தை யாரோ ஒருவர் அசால்டாக திருடி விடுகின்றனர். இதுக்கு பெயர் தான் சைபர் கிரைம் மோசடி.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி 425 கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
நூதன முறையில் திருடப்பட்ட இந்த தொகையில் 338 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளதாகவும் தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதோண்ற மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்தவர்களிடம் இருந்து 1930 என்ற உதவி எண்ணில் சைபர் கிரைம் தொடர்பாக 21,760 அழைப்புகள் வந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.