மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாக தேமுதிக சார்பில் இன்று காலை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது .

.இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது
சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கொடி கட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த் மறைவு அவரது ரசிகர்கள் , தொண்டர்கள் , அரசியல் தலைவர்கள் , திரையுலகினர் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் முதல்வருடன் TR பாலு ,கே.என்.நேரு , மா.சுப்பிரமணியன் , வேலு , உள்ளிட்ட அமைச்சர்களும் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

.