தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த வருடமும் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 238.92 கோடி செலவிடப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த பரிசு தொகுப்புள் வெறும் பொருட்கள் மட்டுமே இருப்பதால் அந்த 1000 ருபாய் மேட்டர் இடம்பெறாமல் போனது இல்லதரிசிகள் மத்தியில் சற்று ஏமாற்றத்தி ஏற்படுத்தியுள்ளது.