மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதிகனமழையும், அதைத்தொடர்ந்து தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளமும் மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.
இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான அரை ஆண்டு தேர்வுகல் உள்ளிட்ட அரசு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறது. இதனை அடுத்து தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு, வரும் ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை (TNPSC) ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலிவுறுத்தியுள்ளார்.
துரதிருஷ்டவசமாக, கனமழையாலும் வெள்ளத்தாலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென்மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் இயல்பு நிலை இன்னும் முற்றிலுமாகத் திரும்பவில்லை. இம்மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தமிழக அரசுப் பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த மூன்று வார காலமாக, அவர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்நிலையில், குறிப்பிட்ட தேர்வுகளை நடத்துவது முறையானதாக இருக்காது என்பதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது X தள பதிவில்;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு, ஜனவரி 7 அன்று நடக்க இருந்த TRB தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி ஜனவரி 6, 7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் (TNPSC) ஒத்தி வைக்க அரசுக்கு வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.