தமிழ்நாடு அரசு சார்பில் TNPSC Group-4 எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 7,247 மையங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற இன்று இத்தேர்வின் முடிவினை TNPSC வெளியிட்டுள்ளது.
2024ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது .
தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் குரூப் 4 நிலை பணியாளர்கள் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணிகளை நிரப்ப வேண்டும் என்றாலும் கூட ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், 2012-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351
2019-ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398, 2022ம் ஆண்டு அறிவிக்கையன் படி 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவான குரூப் 4 பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Also Read : புதுக்கோட்டை அருகே சாமி தரிசனம் செய்ய வந்த சகோதரிகளுக்கு நேர்ந்த சோகம்..!!
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, கடந்தாண்டை விட கூடுதலாக 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு கடந்த
சில நாட்களுக்கு முன் நடைபெற்றது .
அதன்படி ஜூன் 9ம் தேதி இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 7,247 மையங்களில் நடைபெற்ற நிலையில் இன்று இத்தேர்வின் முடிவினை TNPSC வெளியிட்டுள்ளது. tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.உள்ளிட்ட இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்