சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிரவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தில் விலை ஒரு நாள் கூடுவதும் மறு நாள் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
அதன் படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 40 காசுகள் அதிகரித்து 79.40 -ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.