மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை (gold rate) ரூ.45 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அந்த வகையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold rate) கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,750 எனவும், சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து 5,775 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,200 ஆக விற்பனையாகிறது.
மேலும், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 அதிகரித்து 4731 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.37,848 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,080 வரை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று, வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் அதிகரித்து, 81 ரூபாய் 80 காசுகளாகவும், கிலோவுக்கு ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து, 81 ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,.
இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.10 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.83.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.83,700 எனவும் விற்பனையாகிறது.
அமெரிக்க மைய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த, கடன் வட்டியை 0.25 சதவீதமாக உயர்த்தியதே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.