தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி ஆங்காங்கே வெளுத்துவாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஆங்காங்கே தற்போது மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
- புழல் ஏரியில் நீர்இருப்பு 2726 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து இன்று 386 கனஅடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம்
- சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 613 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து இன்று 104 கனஅடியாக அதிகரிப்பு
- கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 438 மில்லியன் கனஅடியாக உள்ளது
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 153 கனஅடியாக சரிவு. நீர்இருப்பு 3132 மில்லியன் கனஅடியாக உள்ளது. குடிநீருக்காக 104 கனஅடி நீர் வெளியேற்றம்
- வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதை அடுத்து, முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்.
- பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணையில் இருந்து 2300 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது