மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.அதிலும் குறிப்பாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் அப்பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த கனமழையால் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளும் நிரம்பி வழிந்ததால் வேறு வழியின்றி அதனை திறக்கும் நிலை ஏற்பட்டது இதன் காரணமாகவும் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.இந்நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தற்போது சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் இன்றைய நிலவரம் வெளியாகி உள்ளது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :
- புழல் ஏரியில் இருந்து 50 கனஅடி உபரிநீர் வெளியேற்றம். நீர்இருப்பு 3054 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 239 கனஅடியாக உள்ளது.
- சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 830 கனஅடி உபரிநீர் திறப்பு. நீர்இருப்பு 765 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 556 கனஅடியாக சரிவு.
- கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரிக்கு நீர்வரத்து 102 கனஅடியாக சரிவு.
- செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் வெளியேற்றம். நீரவரத்து 900 கன அடியாக குறைந்தது.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 90.06% நீர் இருப்பு உள்ளது.
- செம்பரம்பாக்கம் – 89.74%
- புழல் – 92.54%
- பூண்டி – 92.82%
- சோழவரம் – 70.77%
- கண்ணன்கோட்டை – 100%