தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னைய பொறுத்த வரையில் பகல் நேரங்களில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 15.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் 16 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே போல் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.