சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் புயல் பாதித்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் நாளை மருத்துவ முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :
மிக்ஜாம் புயலால் சென்னையில் இதுவரை இல்லாத அளவில் கன மழை பெய்ததால் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ; தற்போது ஒரு சில இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் வடியத் தொடங்கி உள்ளது.
4 முக்கிய கால்வாய்களிலும் இருந்து மழை நீர் உள்வாங்குவதால் மழை நீர் வேகமாக வடிய தொடங்கி உள்ளது
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நாளை மருத்துவ முகாம் நடைபெறும் இதுமட்டுமின்றி புயல் பாதித்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் .
சென்னையில் தற்போது 60 இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது இன்று மாலைக்குள் அனைத்து இடங்களில் இயல்பு நிலை திரும்ப அதிக வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு அரசின் அதிரடி நடவடிக்கையால் புயல் பாதித்த இடங்களில் தற்போது சீரமைமைக்கும் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது என மைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.