தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் Toppur இரட்டைப்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றிய லாரி நேற்று மாலை தருமபுரியைக் கடந்து தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலத்தில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற பார்சல் சர்வீஸ் லாரி மீது மோதியது.
பார்சல் சர்வீஸ் லாரி, அதற்கு முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் ஒரு லாரி பாலத்தின் கீழே கவிழ்ந்தது.
இதற்கிடையில், வந்த இன்னோரு லாரி 2 கார்கள் மீது மோதியது. இதில் ஒரு கார், அந்த லாரியின் கீழே சிக்கிக்கொண்டது. அப்போது லாரியில் தீப்பற்றியதால், லாரி மற்றும் கார் ஆகியவை எரியத் தொடங்கின.
இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம். பாளையம் உள்வட்டம், தருமபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் Toppur இரட்டைப் பாலம் அருகில் 24-1-2025 மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன .
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த சாலை விபத்தில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமதி மஞ்சு (வயது 56) க/பெ. கார்வின் திரு.விமல் (வயது 28) த/பெ.ஜெயபால், திருமதி. அனுஷ்கா (வயது 23) க/பெ. விமல். திருமதி. ஜெனிபர் (வயது 29) க/பெ வினோத் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
Also Read : https://itamiltv.com/thaipoosa-festival-devotees-saying-om-muruga/
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்