தேனியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
தென் இலங்கை பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது வருகிறது.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் வரும் நிலையில், நீர்நிலைகள் நிரம்பு வழிகிறது.
மேலும் வீடுகள், தெருக்கள், வயல்கள் என மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வருகிறனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிகளை செய்து வருகிறது.
மேலும் கனமழை காரணமாக வைகை அணை, அமராவதி அணை, முல்லை பெரியாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேனியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது