தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஓ.எம்.ஆர் சாலையில் பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் SRP, தரமணி, வேளச்சேரி, காமாட்சி மருத்துவமனை, ரேடியல் சாலை வழியாக சென்று துரைப்பாக்கம் சந்திப்பில் மீண்டும் ஓ.எம்.ஆர் சாலையில் தற்காலிகமாக இயக்கப்படுகிறது.
100அடி சாலையில், MMDA காலனி திரு நகர் அருகில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயங்கும் பேருந்துகள் வடபழனி பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
ஆவடி, அம்பத்தூரில் இருந்து கிண்டி மார்க்கமாக வரும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி செல்லும் பயணிகள் தடம் எண் 104C மற்றும் 104CX ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.