ராஜஸ்தானில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் வயிற்றுக்குள் மருத்துவர்கள் துண்டை வைத்து தைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
ராஜஸ்தானில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவர் குழந்தை பெற்ற பின் 3 மாதங்களாக அதீத வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார் . ஒரு கட்டத்தில் வலி தாங்கமுடியாமல் அவர் துடிக்க அவரது குடும்பத்தினர் அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .
Also Read : உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் தொடங்கியது…!!
அப்போது பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் துண்டு இருப்பது தெரியவந்துள்ளது . பிரசவத்திற்காக அரசு மருத்துவனைக்கு சென்ற போது மருத்துவர்கள் அலட்சியமாக துண்டை வயிறில் வைத்து தைத்துள்ளனர் .
வலியை போக்க 3 மாதங்களாக அந்த பெண் உட்கொண்ட வலி நிவாரணி மருந்துகளும் உடல் உறுப்பை பாதித்துள்ள நிலையில் தற்போது அறுவை சிகிச்சை மூலம் துண்டு அகற்றப்பட்டு அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.