டேட்டிங் செயலி மூலம் பழகி 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றதாக இளைஞர் மீது 34 வயது பெண் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
சென்னையில் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான நபர், பழகிய ஒரே நாளில் 4 சவரன் நகையை பறித்து ஏமாற்றியதாக 34 வயது பெண் கண்ணீர் மல்க போலீசில் புகார் அளித்துள்ளார்.
Also Read : போதைப்பொருள் சப்ளை – 25 வயது பெண் தலைமையிலான கும்பல் அதிரடி கைது..!!
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான போரூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருடன் கத்திப்பாரா அருகே சந்தித்து பேசிய போது, தனது பர்ஸில் இருந்த 4 சவரன் செயினை கழுத்தில் போட்டுக்கொண்டு, சில நாட்களில் தருவதாக கூறிச் பிரசாந்த் அங்கிருந்து நைசாக நழுவி உள்ளார் .
இதையடுத்து வீட்டில் நகை எங்கே என்று கேட்க ஆரம்பிக்க பதற்றமடைந்த அந்த பெண் பிரசாந்த்திடம் இருந்து தனது நகையை திரும்பி பெற முயன்றுள்ளார் .
பிரசாந்த்தை பலமுறை தொடர்பு கொண்டும் அவரை சந்திக்க முடியவில்லை என்பதால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்த அந்த பெண் தனது நகையை மீட்டுத்தரும்படி போலீசில் புகார் அளித்துள்ளார்.