உரிய டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தவர்களிடம் இருந்து இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 22.7 லட்சம் ரூபாய் அபராத வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் நீண்ட நெடுந்தூரம் செல்ல அதிகளவில் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர் . மற்ற போக்குவரத்து பயணங்களை விட ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் விலை குறைவு என்பதே இதன் காரணம் .
இருப்பினும் பலர் டிக்கெட் எதுவும் எடுக்காமல் ரயிலில் பயணம் மேற்கொண்டு பின்னர் டிக்கெட் விலையை விட அதிகமாக அபராதம் செலுத்தி வருகின்றனர் .
அந்தவகையில் உரிய டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தவர்களிடம் இருந்து இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 22.7 லட்சம் ரூபாய் அபராத வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் மட்டும் மொத்தம் 10.39 லட்சம் வழக்குகள் பதிவு செய்து ரூ. 57.48 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே கோட்டங்களிலேயே சென்னை கோட்டத்தில் தான் நடப்பு நிதி ஆண்டில் அதிகப்படியான அபராத தொகையாக ரூ.11.01 கோடி வசூல் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.