பிக்பாஸ்வீட்டிற்குள் ஜி.பி.முத்துவை, விளையாட்டு என்ற பெயரில் டார்ச்சர் செய்த ராபர்ட் மாஸ்டருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்தா மகாலட்சுமி,
ராம் ராமசாமி, ஆரியன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்கிரமன், அமுத வாணன், மகேஸ்வரி
சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி,
நிவா மற்றும் தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் ஜி.பி.முத்து கேமெரா முன் நின்று நான் சந்தோஷமா இருக்கேன் நீங்க எல்லாம் ஜாலியா இருங்கள் என்று கூறிவிட்டுப் பறக்கும் முத்தத்தையும் தனது குடும்பத்திற்கு அளித்தார்.
இதன்பின்னர், தூங்கிக் கொண்டிருந்த ஜி.பி. முத்துவை ராபர்ட் மாஸ்டர் டார்ச்சர் செய்து, அவரை பயம் காட்டுவது போன்ற ப்ரோமோ வெளியானது.
இதில், பதறிப் போன ஜி.பி.முத்துவை சக போட்டியாளர்களான அசீம் மற்றும் வி.ஜே.கதிரவன் இருவரும் அவரை தேற்றினர்.
தொடர்ந்து ஸ்விம்மிங் பூல் அருகேயுள்ள பெட்டில் ஜி.பி.முத்து படுத்துக்கொள்கிறார். பின்னர், கொட்டும் சாரலில் ஆட்டம் போடுவது போன்று ப்ரொமோ முடிகிறது.
இந்நிலையில், வெகுளியான ஜி.பி.முத்துவை ராபர்ட் மாஸ்டர் இப்படி டார்ச்சர் செய்யலாமா என ஜி.பி.முத்துவின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர்.
மேலும், ஜி.பி.முத்துவுக்கு ஆதரவாக கமென்டுகள் பகிரப்பட்டு வருகிறது.
தலைவன் டைட்டில் வாங்காமல் விடமாட்டோம், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒரே செலிபிரட்டி அவர்தான்.
ஜெயிக்கிறீங்களோ இல்லையோ உங்கள் இயல்பு மாறாம fun பண்ணிட்டு வாங்கத் தலைவா என்று ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் கூறியுள்ளனர்.