சென்னையில் நைட் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த நபர் ஒருவரை மிரட்டி கூகுள் பே மூலமாக ரூபாய் 50 ஆயிரத்து 500 பணத்தை திருநங்கைகள் (transgenders) பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு தனியாக செல்பவர்களை குறி வைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வரும் நிலையில், லிப்ட் கேட்பது போல வாகனத்தை மறித்து வழிப்பறியில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்ற செயல்கள் நடந்த வண்ணம் உள்ளன.
இச்சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதையும் மீறி இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு சாலையில் இளைஞர் ஒருவரை மிரட்டி கூகுள் பே மூலமாக 50,500 பணத்தை திருநங்கைகள் வழிப்பறி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற நபர் நைட் ஷிப்ட் முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பள்ளிக்கரணை சாலையில் ராமமூர்த்தி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் (transgenders) அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அவரிடம் இருந்து அவருடைய மொபைல் போனை பிடுங்கிய திருநங்கைகள் அவரது கூகுள் பே-லிருந்து ரூபாய் 50 ஆயிரத்து 500 பணத்தை அவரிடம் இருந்து மிரட்டி பறித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த ராமமூர்த்தி இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை காவல்துறையில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் ராமமூர்த்தியின் பணம் பணத்தை பறித்த திருநங்கைகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னையில் முக்கிய பகுதியாக விளங்கும் பள்ளிக்கரணை சாலையில் நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.