தொடர் விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக ( special buses for holiday ) போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
வார விடுமுறை மற்றும் பக்ரீத்தை முன்னிட்டு www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர் . இந்நிலையில் 1300 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
Also Read : குவைத் தீ விபத்து – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!
அதன்படி வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டத்துக்கு கூடுதலாக 1270 பேருந்துகளும், 17ம் தேதி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் குறித்து சிறப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது . எனவே ( special buses for holiday ) பயணிகள் அனைவரும் இந்த சிற்பபு வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.