பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்த விவகாரத்தில் இயக்குநர் மோகன் ஜியை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது அவரை திருச்சி நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்துள்ளது .
இயக்குநர் மோகன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read : வாடகை வீட்டில் இருந்த பெண்ணை ரகசிய கேமராவால் உளவு பார்த்த வீட்டு உரிமையாளரின் மகன்..!!
“நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் தான் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்” எனப் பேசி இருந்தார்.
இது தொடர்பாக பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி எஸ்.பி. வருண் குமார் உத்தரவின் பேரில் சென்னை ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து மோகன் ஜி கைது செய்யப்பட்டார் .
இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜியை, சொந்த ஜாமினில் திருச்சி நீதிமன்றம் விடுவித்துள்ளது. கைது செய்வதற்கு உரிய காரணங்கள் முறையாக இல்லை என கருத்து தெரிவித்த நீதிபதி மோகன் ஜியை சொந்த ஜாமினில் விடுவிப்பதாக அறிவித்துள்ளது.