திருச்சியில், திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் (nurses) பிரசவம் பார்த்த நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட்டுள்ளனர்.
திருச்சியில், திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 26 வயதாகும் ஸ்ரீநிதி என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால், பிரசவ வலி ஏற்பட்ட அந்த நேரத்தில்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்ப்பிணி ஸ்ரீநிதிக்கு அங்கிருந்த செவிலியர்கள் (nurses) பிரசவம் பார்த்துள்ளனர். இதனையடுத்து, பிரசவத்தின் போது எதிர்பாராத விதமாக சிசு உயிரிழந்து உள்ளது.
ஆனால், சிசு உயிரிழந்து 3 மணி நேரம் ஆன பிறகும் அதுபற்றி தெரிவிக்காமல் செவிலியர்கள் இழுத்தடித்து உள்ளனர்.
மேலும், பணி நேரத்தில் மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லாத காரணத்தாலும், செவிலியர்கள் பிரசவம் பார்த்தாலும் தான் சிசு உயிரிழந்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் குற்றச்சாட்டி உள்ளனர்.
இதனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக திரண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கற்பிணிப் பெண்ணிற்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்த நிலையில், சிசு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.