அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களாக இருக்கும் முன்னாள் அதிபர் டிரம்ப் மாற்றும் கமலா ஹாரிஸுக்கு எதிர் எதிரே ஆதரவுகள் பெருகி வருகிறது.
இந்நிலையில் இன்று இந்த இருவரும் மக்கள் முன் நேரடி விவாதம் நடத்தினர் அப்போது இருவரும் பேசிய காரசார சம்பவங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் மோசமடைந்துள்ளது; வரியைக் குறைத்து, சிறந்த பொருளாதார நாடாக மாற்றுவேன்.
மார்க்சிய சிந்தனையாளராக உள்ளார் கமலா ஹாரிஸ்; பைடனின் திட்டத்தையே தொடர்ந்து அவர் செயல்படுத்துவார்; குற்றச்செயலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் புலம்பெயர்ந்தோராக உள்ளனர்.
பைடன் ஆட்சியில் 9 மாதங்களிலும் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கின்றனர்; எனது நிலைப்பாடு கருக்கலைப்புக்கு எதிரானது என்றாலும் மக்களின் கருத்துபடி செயல்படுவேன் என டிரம்ப் கூறினார்.
Also Read : கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் மனைவி மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய நபர் கைது..!!
டிரம்ப் ஆட்சிக்காலத்தில் சுகாதாரமும், பொருளாதாரமும் மோசமாக இருந்தது என கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
கடந்த ஆட்சியில் டிரம்ப் செய்த தவறுகளை 4 ஆண்டுகளில் பைடன் சரி செய்துள்ளார். சீனாவுக்கு அமெரிக்காவை விற்றவர் டிரம்ப். அவரது ஆட்சியில் வர்த்தகப் போர் ஏற்பட்டது.
பணக்காரர்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளித்தவர் டிரம்ப். சட்டவிரோத குடியேற்றத்தைத் தவிர பேச டிரம்புக்கு வேறு எதுவும் இல்லை. அரசியலமைப்பின்மீது நம்பிக்கையற்றவர் டிரம்ப் என அவருடன் பணியாற்றியவரே கூறியுள்ளார்.
ஒரு பெண்ணின் உடல் தொடர்பாக மற்றவர் முடிவெடுக்க அனுமதிக்கக் கூடாது; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம்; டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையை கொண்டுவந்துவடுவார் என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.