சென்னை வானகரத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம், கழக துணைத்தலைவர் திரு.S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 06.08.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.30 மணிக்கு சென்னை, வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து கழக பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கேட்டுக்கொள்கிறேன். கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.