கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறையே அதனை ஆக்கிரமிப்பதா? என ம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
500 ஆண்டுகள் பழமையான சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிமிரத்து வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றியிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை மீது புகார் எழுந்துள்ளது.
Also Read : கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது..? – பதில் கேட்கும் அண்ணாமலை
திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே இரவீஸ்வரர் கோயில் திருக்குளத்தை மூடி வாடகை வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றி அதன் மூதல் வசூலில் இறங்கியிருப்பதாக வரும் செய்திகள் கடும் கண்டனத்திற்குரியது.
சோழர் காலத்தில் கட்டப்பட்டு பல்வேறு அதிசயங்களையும், புராணப் பின்னணியையும் கொண்டிருக்கும் இரவீஸ்வரர் திருக்கோயிலின் திருக்குளம், நிலத்தடி நீரை பெருக்குவதோடு, குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியதால் அக்குளம் மூடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். எனவே, வேண்டுவோருக்கு வேண்டியதை தந்து அருள் புரிந்து வடசென்னைக்கே பெருமை சேர்க்கும் வியாசர்பாடி இரவீஸ்வரர் திருக்கோயில் திருக்குளத்தை மீட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.