தமிழக வெற்றி கழகம்” (TVK) என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய்க்கு நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1753363235380863305?s=20
மேலும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக அரசியல் கட்சி பெயரை (TVK)அறிவித்துள்ள விஜய்க்கு, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய,நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,
தமிழக வெற்றி கழகம்.. கட்சி பெயர் நன்றாக இருக்கிறது. வரவேற்கிறேன். கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தான்.
அவருக்கான வாக்காளர்கள் அவருக்கு. எனக்கான வாக்காளர்கள் எனக்கு. விஜய் கடினமாக உழைக்க வேண்டும். மண்ணை ஆள்வதற்கு முன்னால் தமிழக மக்களின் மனங்களை விஜய் வெல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“விஜய் என்ன தத்துவத்தை முன்வைக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். விஜய்க்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் சேர்த்து சொல்றேன். தொடங்குவது எளிது. தொடர்வது ரொம்ப கடினம்.
தொடங்கும் போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை தொடர வேண்டும். அப்படி தொடர்ந்தால் யாரும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கல்ல.
இன்றைய அரசியலில் சூழலில், ஒரு நடிகரின் கட்சிக்கு, அவரின் ரசிகர் மட்டும் வாக்களித்து வென்று நாட்டை ஆளுவது என்பது சரித்திர புரட்சியாகும்.
இதையும் படிங்க : TVK: கட்சியின் பெயரை அறிவித்த விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஆனால் வெகுவான மக்களை இழுக்கனும். எம்.ஜி.ஆருக்கு அது இருந்தது. அதனால் அவருக்கு பொதுமக்களின் ஆதரவு இருந்தது. மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும்.
மக்களின் இதயத்திற்கு நெருக்கமாக இறங்கி செல்ல வேண்டும். இது ஒரு நாள், இரண்டு நாளில் நடக்கிற காரியமல்ல.
பத்து ஆண்டுகளில் பயணம் செய்தால் தான், நெருங்க முடியும். அதை விஜய் செய்வார் என நம்புகிறேன்” என்று கூறினார்.
இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமை இருக்கிறது. நடிகர் விஜய்யின் இந்த முடிவிற்கு பாராட்டுக்கள். அவரது மக்கள் பணி சிறக்கட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதே போல் அண்ணாமலை, காயத்திரி ரகுராம் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.