உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினர் மக்களுக்கு ( Hunger day ) உணவு வழங்கி உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, 28.05.2024 இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் .
மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
Also Read : இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி பெயரில் விண்ணப்பம்..!!
சொன்னது சொன்னபடி உலக பட்டினி தினத்தையொட்டி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமபந்தி அன்னதானத்தை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் ( Hunger day ) சார்பில் உணவு வழங்கப்பட்டது.