தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மாலையணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் .
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் . அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்,சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியாரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார்.
விஜய் கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். இதற்கு முன்பாக தமிழகம் வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மட்டுமே தலைவர்களின் நினைவு நாள மற்றும் பிறந்த நாட்களில் மரியாதை செலுத்துவதை மேற்கொண்டு வந்தனர். முதன்முறையாக விஜய் நேரடியாக வந்து ஒரு தலைவருக்கு மரியாதை செலுத்தி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.