உதட்டில் பிரஷ் வைத்து ஒரே நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்த் ஆகியோரின் ஓவியங்களை (ART) அற்புதமாக வரைந்த ஓவிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் தான் ஓவிய ஆசிரியர் சு.செல்வம் .
நடிகருக்கும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு ஓவிய அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் என்பதை குறிக்கும்வகையில் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ள இந்த ஓவிய ஆசிரியர் .
தன் “உதட்டில்” இரண்டு பிரஷ்கள் வைத்துக் கொண்டு “ஒரே நேரத்தில்” முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் கேப்டன் விஜயகாந்த் ஆகியோரின் படங்களை தத்துரூபமாக (ART) வரைந்துள்ளார் .
திரை உலகில் ஆக்சன் மன்னனான வலம் வந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை தமிழ் திரையுலகில் கருப்பு எம்ஜிஆர் என ரசிகர்கள் கொண்டாடினர் .
தன்னை நாடி வரும் மக்களுக்கு வயிறார சோறு போட்டு வழியனுப்பும் அந்த பன்முகனாகவே அவரை அனைவரும் கருப்பு நிற எம்ஜிஆர் என போற்றி புகழ்ந்தனர் .
அந்த காலத்தில் ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆரை சந்திக்க வரும் யாராக இருந்தாலும் சாப்பிடாமல் வெளியில் செல்லவே முடியாதாம்.
சொகுசு காரில் வரும் செல்வந்தர்களின் இருந்து காலில் செருப்பு இல்லாமல் வரும் அடிமட்ட ஏழை வரை எம்ஜிஆர் அவர்களை சந்திக்க வந்தால் நிச்சயம் சாப்பிட்டு தான் செல்ல வேண்டுமாம் .
இதற்காகவே ராமாபுரம் தோட்டத்தில் எப்போதும் உணவு சமைத்துக் கொண்டே இருப்பார்களாம், எம்ஜிஆருக்கு பின்னர் விஜயகாந்த் அவர்களும் வீடாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும்
தன்னை பார்க்கவரும் அனைவரும் கட்டாயம் சாப்பிட்டு தான் போக வேண்டும் என்று அவர்களுக்கு சாப்பாடு போட்டு தான் மறு வேலை பார்ப்பாராம் .
பாசம் காட்டுவதிலும் கோவம் காட்டுவதிலும் அவருக்கு நிகர் அவரே தான். வெளியில் கரடுமுரடாக இருந்தாலும் மனதளவில் அவர் குழந்தை என அனைவரும் கூற நாம் கேட்டுருக்கிறோம்.
இந்நிலையில் அன்மையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஓவிய அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு எம்ஜிஆர் என்பதை குறிக்கும் விதமாக ஓவிய ஆசிரியர் செல்வம் இந்த புதிய முயற்சியை செய்துள்ளார் .
Also Read : https://itamiltv.com/ayodhya-ram-people-of-other-religions-will-not-like-this/
தன் “உதட்டில்” இரண்டு பிரஷ்கள் வைத்துக்கொண்டு ஒரு பிரஷில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஓவியமும், மற்றொரு பிரஷில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் ஓவியமும்
ஒரே நேரத்தில் குறிப்பாக சொல்லவேண்டும் என்ற வரும் ஐந்து நிமிடங்களில் இந்த ஓவியத்தை செல்வம் வரைந்துள்ளார்.
பகுதி நேர ஓவியரான செல்வத்தின் இந்த புதிய முயற்சிக்கும் அவரது அற்புத படைப்புக்கும் தற்போது நல்ல வரவேற்பு கிடைப்பதுடன் அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.