பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் கிருஷ்ணகிரி நாயக்கன்பள்ளியில் செயல்பட்டு அவரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தீடிர் ஆலாய்வு மேற்கொண்டார் .
விடுதியிலுள்ள வசதிகள் குறித்து மாணவர்களின் கருத்துக்களை கேட்டுப்பெற்ற பின்னர், சமையல் கூடம், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை, உணவுக்கூடம், தங்குமிடம், கழிப்பறைகள் என விடுதியில் உள்ள வசதிகளை ஆய்வு செய்தார் .
கல்வியின் பொருட்டு வீட்டை விட்டு வெகுதூரத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் துறை சார்ந்த அதிகாரிகள் – அலுவலர்கள் – விடுதிப்பணியாளர்களுக்கு உத்தரவிட்டார் அமைச்சர் உதயநிதி.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் இன்று அமைச்சர் உதயநிதி மேற்கொண்டார் .
சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த அரிசி – காஸ் உள்ளிட்ட சமையல் பொருட்களின் இருப்பை பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரியான அளவில் இருக்கின்றதா என்று ஆய்வு செய்த அமைச்சர் மாணவர்கள் & விடுதிப் பணியாளர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை கேட்டறிந்தார் .