கலைஞர் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை சீரழிக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும், அவர்களின் அடிமைகளையும் வீழ்த்துவோம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாதியின் நூற்றாண்டை போற்றும் விதமாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் வடக்கு ஒன்றியம், பெரியபணிச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :
கலைஞர் அவர்களின் சாதனைகளை உலகிற்கு எடுத்துரைப்போம் கலைஞர் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை சீரழிக்கத் துடிக்கும் பாசிஸ்ட்டுகளையும், அவர்களின் அடிமைகளையும் வீழ்த்துவோம்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியாவை காக்க – I.N.D.I.A கூட்டணியை வெல்லச் செய்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.