அமைச்சர் உதயநிதி (udhay) ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கங்கப்பட இருக்கிறது என்ற பரபரப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவரான பிறகு அக்கட்சி எதிர்கொண்ட முதல் சட்டசபைத் தேர்தலிலே தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
அந்த தேர்தலில், முதன் முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஓராண்டுக்கு பிறகு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக கடந்த 2 நாட்களாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.
முன்னதாக இவ்விவகாரம் குறித்து வெளியான தகவலில், பிப்ரவரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வார் என்றும்,
அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வழிவகை செய்யப்படலாம் எனவும் தலைமை செயலக வட்டாரம் தரப்பில் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
https://x.com/ITamilTVNews/status/1746104927108432355?s=20
மேலும், தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் வசம் உள்ள துறைகளில் இருந்தும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படலாம் என்பது கூடுதல் தகவலும் சொல்லப்பட்டது.
அத்தகைய நிலையில், அது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருக்கிறோம்” என நகைச்சுவையாக பதிலளித்து சென்றார்.
இருந்தும் அந்த துணை முதலமைச்சர் பேச்சு அணையாத நிலையில், தற்போது அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே மௌனம் கலைத்துள்ளார்.
அவருடைய தகவலில், “துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்ற செய்தி வதந்தியே. என்னுடைய உடல்நிலை குறித்த வதந்திகளை பரப்பி பார்த்தனர்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/scam-govt-warns-users-against-dialling-401-followed-by-unknown-mobile-number/
அது எடுபடவில்லை என்பதால் தற்போது இந்த வதந்தியை பரப்புகின்றனர்” இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். என கூறியுள்ளார்.
இதன்மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (udhay) துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.