ஜெர்மனியில் கடந்த மாதம் நடைபெற்ற SpecialOlympics World Games Berlin 2023ல் இந்தியா சார்பில், பங்கேற்ற தமிழக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் – வீராங்கனைகளை திறமையாக ஆடி தாய்நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர் .
இதையடுத்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த வீரர் – வீராங்கனைகள் பெற்ற பதக்கங்களை காட்டி வாழ்த்து பெற்றனர் .
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி கூறியதாவது :
ஜெர்மனியில் கடந்த மாதம் நடைபெற்ற SpecialOlympics World Games Berlin 2023ல் இந்தியா சார்பில், பங்கேற்று தங்கம் – வெள்ளி – வெண்கலம் எனப் பதக்கங்களை குவித்த தமிழ் நாட்டின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் – வீராங்கனையர் – பயிற்றுநர்களை பாராட்டி தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் நினைவுப்பரிசுகளை வழங்கினோம்.
விளையாட்டில் சாதிக்கத் தடையேதும் இல்லையென வியர்வை சிந்தி உயர்வை அடைந்த மாற்றுத்திறன் வீரர்களுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார் .