வேலூர் மற்றும் அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட DMK officials உடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக
திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட DMK officials உடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டோம்.
தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் – தொகுதியில் நிலவும் சூழல் – தேர்தலுக்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அமைச்சர் – சட்டமன்ற உறுப்பினர்கள் –
மாவட்டக்கழகச் செயலாளர்கள் மாவட்ட – மத்திய – பகுதி – நகர – பேரூர் கழக நிர்வாகிகள் – மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் விரிவாக கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.
2021 ல் தமிழ்நாட்டில் விடியலைத் தந்தது போல, 2024-ல் இந்திய அளவிலும் விடியலைத் தர வேண்டும் என்ற லட்சியதோடு ஒற்றுமையோடு பணியாற்றுமாறு உரையாற்றினோம்.
இதேபோல் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டோம். மாவட்ட அமைச்சர் – மாவட்டக் கழகச் செயலாளர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் –
மாவட்ட – ஒன்றிய – பகுதி – நகர – பேரூர் கழக நிர்வாகிகள் – உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தொகுதி மக்களின் கோரிக்கை – கள நிலவரம் – பிரச்சார வியூகம் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடினோம்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம் தொகுதி மேம்பாட்டுப் பணிகளின் தற்போதைய நிலை –
தொகுதி மக்களின் தேவைகள் – தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கழக நிர்வாகிகளிடம் விரிவாக கேட்டறிந்தோம்.
Also Read : https://itamiltv.com/kilambakkam-bus-stand-people-suffering/
ஜனநாயகப் போரின் முக்கிய கட்டத்தில் இருக்கும் நாம் அனைவரும் #INDIA கூட்டணியின் வெற்றிக்கு, இரவு – பகல் பாராமல் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியார் பிறந்த மண்ணில் விஷமிகளை விரட்டியடித்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக களப்பணியாற்றுவோம்