விளையாட்டின் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழக விளையாட்டு TN Players வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஊக்கத்தொகை வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
நம் திராவிட மாடல் அரசில் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத் துறை எண்ணற்ற உயரங்களை தொட்டு வருகிறது. விளையாட்டில் திறமையுள்ள
ஒவ்வொரு வீரர் – வீராங்கனையையும் ஊக்கப்படுத்தி , அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, செஸ் விளையாட்டில் முத்திரை பதித்து வரும் தம்பிகள் @rpraggnachess @DGukesh ஆகியோருக்கு கழக அரசின் ELITE திட்டத்திட்டத்தின் கீழும்,
செஸ் வீராங்கனை சகோதரி @chessvaishali -க்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்துமென மூவருக்கும் தலா ரூ.15 லட்சத்துக்கான காசோலைகளை சர்வதேச அளவிலான பயிற்சிகளை பெறுவதற்காக இன்று வழங்கினோம்.
நம் தமிழ்நாட்டு செஸ் TN Players என் அன்பும், வாழ்த்தும்.
விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்ல, தனித் திறமையுடன் சாதிக்க துடிப்போருக்கும் கழக அரசு என்றும் துணை நின்று வருகிறது.
அந்த வகையில், உலகிலேயே உயரமான எவெரெஸ்ட் சிகரத்தை வருகிற ஏப்ரல் மாதம் ஏறி சாதனைப் படைக்கவுள்ள சகோதரர் திருலோகச்சந்திரன் அவர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும்,
சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்கவுள்ள தங்கை பிரியதர்ஷினியின் போட்டி மற்றும் பயணச் செலவுகளுக்கென ரூ.55 ஆயிரத்துக்கான காசோலையையும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து இன்று வழங்கினோம்.
இந்திய ஒன்றியத்தின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதற்காக, சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
அதே போல, ஆண்கள் – பெண்கள் – மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் விளையாட்டுத்துறையில் சாதிக்க துணை நின்று வருகிறோம்.
Also Read : https://itamiltv.com/padma-bhushan-for-vijayakanth-eps-wish/
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீரர் சகோதரர் ரா.ராஜேஷ் அவர்களுக்கு செயற்கைக் கால்கள் வசதியை ஏற்படுத்த
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து ரூ.12 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கி வாழ்த்தினோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.