கிழக்கு உகாண்டாவில் உள்ள புடலேஜா மாவட்டத்தில் மூசா ஹசஹ்யா என்ற நபர் தனது 12 மனைவிகள், 102 குழந்தைகள் (102 children) மற்றும் 578 பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கிழக்கு உகாண்டாவின், தொலைதூர கிராமப்புற பகுதியான புடலேஜா மாவட்டத்தில் உள்ள புகிசா என்ற கிராமத்தில் வசிக்கும் 68 வயதான மூசா ஹசஹ்யா, இது முதலில் ஒரு நகைச்சுவையாக தான் இருந்தது … ஆனால், இப்போது அதன் பெரும் சிக்கல்களாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து மூசா ஹசஹ்யா கூறுகையில், “எனது உடல்நிலை சரியில்லாமல், இவ்வளவு பெரிய குடும்பத்திற்கு வெறும் இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதால், எனது 12 மனைவிகளுக்கு உணவு, கல்வி, உடை போன்ற அடிப்படை வசதிகளை என்னால் வழங்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
மேலும், தற்போது வேலையில்லாமல் இருக்கும் ஹசஹ்யா, தனது கிராமத்தில் ஒரு சுற்றுலா அம்சமாக மாறியுள்ளார், தொடர்ந்து தனது குடும்பம் மேலும் விரிவடைவதைத் தடுக்க அவரது மனைவிகள் இப்போது கருத்தடை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நான் இதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால், என்னால் கவனிக்க முடியாத பல குழந்தைகளை உருவாக்கும் எனது பொறுப்பற்ற செயலிலிருந்து நான் கற்றுக்கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஹசஹ்யாவின் குழந்தைகள் தற்போது பாழடைந்த வீடு, புல் ஓலைகள் நிறைந்த மண் குடிசைகளில் வாழ்கிறார்கள்.
அவர் தனது முதல் மனைவியை 1972 இல் ஒரு பாரம்பரிய விழாவில் திருமணம் செய்து கொண்டார், அவர்கள் இருவருக்கும் சுமார் 17 வயதாக இருக்கும் போது அவரது முதல் குழந்தை சாண்ட்ரா நப்வைர் ஒரு வருடம் கழித்து பிறந்தார்.
மேலும், எங்கள் குடும்ப பாரம்பரியத்தை விரிவுபடுத்த பல குழந்தைகளை உருவாக்க பல மனைவிகளை திருமணம் செய்ய எனது சகோதரர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனக்கு அறிவுறுத்தினர்,” என்று ஹசஹ்யா கூறினார்.
மாட்டு வியாபாரி மற்றும் கசாப்புக் கடைக்காரராக இருந்த அவரது அப்போதைய நிலையைக் கண்டு கவரப்பட்ட , கிராம மக்கள் 18 வயதுக்குட்பட்ட தங்கள் மகள்களுக்கு தன்னை திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள் என்று கூறினார்.
1995 இல் உகாண்டாவில் குழந்தை திருமணம் தடைசெய்யப்பட்டது, அதே சமயம் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் சில மத மரபுகளின்படி பலதார மணம் அனுமதிக்கப்படுகிறது.
ஹசஹ்யாவின் 102 குழந்தைகள் (102 children) 10 முதல் 50 வயது வரை உள்ளவர்கள், இளைய மனைவிக்கு சுமார் 35 வயது இருக்கும்.
இதில், “சவால் என்னவென்றால், தனக்கு முதல் மற்றும் கடைசியாகப் பிறந்த குழந்தைகளின் பெயரை மட்டுமே என்னால் நினைவில் வைக்க முடியும், ஆனால், சில குழந்தைகளின் பெயர்களை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை,” எனவும், அவர்களை அடையாளம் காண எனக்கு உதவுவது தாய்மார்கள் தான்”என்றும் கூறினார்.
இந்நிலையில், அவரது மனைவிகளில் இருவர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர், மேலும், மூன்று பேர் இப்போது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறொரு நகரத்தில் வசிக்கின்றனர், ஏனெனில் வீட்டுத் தோட்டத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது.
உங்கள் மனைவிகளில் அதிகமானவர்கள் உங்களை கைவிடவில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று ஹசஹ்யாவிடம் கேட்டபோது, “அவர்கள் அனைவரும் என்னை நேசிக்கிறார்கள், அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார்.