சிங்கப்பூரில், பெண்கள் தன்னுடன் உடலுறவு கொள்ளும் போது டிண்டர் மூலம் ரகசியமாக படம் பிடித்ததற்காக இளங்கலை பட்டதாரிக்கு வித்யாசமான தண்டனை (Punishment) வழங்கி உள்ளது நீதிமன்றம்.
சிங்கப்பூரில், டேட்டிங் அப்ளிகேஷனான டிண்டர் மூலம் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது ரகசியமாக படம் பிடித்த வழக்கில் பட்டதாரி இளைஞர் ஒருவருக்கு 1 1/2 வருடம் மருத்துவ சிகிச்சையில் இருக்குமாறு வித்யாசமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் ஒருவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை, அவர்களின் அனுமதியின்றி எடுத்ததாக அவரே ஒப்புக்கொண்ட நிலையில், இந்த தண்டனை (Punishment) அவருக்கு கொடுக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய துணை முதன்மை மாவட்ட நீதிபதி லூக் டான், குற்றஞ்சாட்டடப்பட்ட நபரின் மனநிலையை சரிசெய்வது அவசியம் என்றும், பொதுவாக, ஒரு குற்றவாளிக்கு மனநலக் கோளாறு இருந்தால், இதுபோன்ற தீய செயல்களுக்கு ஒருவரின் மனநிலை சார்ந்தும் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட 18 வயது பெண், சம்பந்தப்பட்ட இளைஞருடன் உடலுறவு கொள்ள பல்கலைக்கழக விடுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, உடலுறவு கொள்ளும்போது, அந்த இளைஞர் அதனை கேமராவில் பதிவு செய்வதை உணர்ந்த அந்த பெண், கோபமடைந்து ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இளைஞர் நான் மொபைலில் எதையும் பதிவு செய்யவில்லை என்று கூறியதை நம்பிய அந்த பெண், உடலுறவுக்கு சரி என்று சொல்லி உள்ளார். பிறகு அன்று இரவு இருவரும் சாப்பிட அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு, அந்த பெண் உன் காதலியாக நான் இருக்க விரும்புகிறேன் என்று கூற, அந்த இளைஞர் அதனை மறுத்திருக்கிறார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அந்த இளைஞரை மீண்டும் அந்த பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அந்த இளைஞர் அந்த பெண்ணை பிளாக் செய்திருப்பத்தை உணர்ந்த அந்த பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்ததை அடுத்து அந்த இளைஞருக்கு 1 1/2 வருடம் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.