அமெரிக்காவில் ஒமைக்ரான் அச்சத்துக்கு இடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருவமான ஒமைக்ரான் தற்போது உலக நாடுகளிடையே அசுர வேகத்தில் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த புதிய வைரசான ஒமைக்ரன் மற்ற கொரோனா வைரஸ்களையும் விடவும் வேகமாக பரவும் எனவும், தடுப்பூசி திறனை கணிசமாக குறைக்கும் ஆற்றல் கொண்டது எனவும் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளதாக அம்மாகாண சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
டிசம்பர் முதல் வாரம் தொடங்கி தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் பதிவான பாதிப்புகளில் பாதியளவுக்கு 5 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.